
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் சுமார் ஒன்றரை கோடி பேர் இறந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா எனும் கொடிய தொற்று பெரும்பாலான நாடுகளை விட்டு வைக்கவில்லை. 2020 ஜனவரி முதல் கடந்த ஆண்டு டிசம்பர் வரை 50 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் இறந்ததாக பல்வேறு தரவுகள் தெரிவிக்கும் நிலையில், அதனை மறுக்கும் வகையிலான தகவலை உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஒன்றரை கோடி பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளதாக அதிர்ச்சி தகவலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மரணங்களைவிட, பலி எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அதிக அளவில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே கொரோனா மரணங்கள் தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தரவு கணக்கிடும் முறைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதையும் படிக்கலாம்: உடலிலிருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் இறந்துகிடந்த யானை - தடாகம் அருகே அதிர்ச்சி!