3 கோடியை தாண்டியது கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை - மத்திய சுகாதாரத்துறை தகவல்

3 கோடியை தாண்டியது கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை - மத்திய சுகாதாரத்துறை தகவல்

3 கோடியை தாண்டியது கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை - மத்திய சுகாதாரத்துறை தகவல்
Published on

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடெங்கும் கொரோனா தொற்று நிலவரம் குறித்த புதிய புள்ளி விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 154 ஆக குறைந்துள்ளது. உயிரிழப்புகளும் 724 ஆக குறைந்துவிட்டது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 14 ஆயிரத்து 713 ஆக இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 4 லட்சத்து 50 ஆயிரத்து 899 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் 12 லட்சத்து 35 ஆயிரத்து 287 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் இதுவரை மொத்தமாக 37 கோடியே 73 லட்சத்து 52 ஆயிரத்து 501 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு கோடியே 54 லட்சத்து 20 ஆயிரத்து 956 தடுப்பூசிகள் மாநில அரசுகள் வசம் உள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com