பிரிட்டனில் வேகமாக பரவும் ஒமைக்ரான்: ஒரே நாளில் 78,610 பேருக்கு தொற்று உறுதி

பிரிட்டனில் வேகமாக பரவும் ஒமைக்ரான்: ஒரே நாளில் 78,610 பேருக்கு தொற்று உறுதி

பிரிட்டனில் வேகமாக பரவும் ஒமைக்ரான்: ஒரே நாளில் 78,610 பேருக்கு தொற்று உறுதி
Published on
பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 78 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தச் சூழலில் ஒமைக்ரான் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரே நாளில் 68,053 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அதை விட கூடுதலாக ஒரே நாளில் 78,610 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதே போல், பிரிட்டனின் ஒரு சில பகுதிகளில் கொரோனாவின் திரிபான ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், அதிகரித்திருப்பதாக அந்நாட்டின் தலைமை சுகாதாரத்துறை அதிகாரி கிறிஸ் விட்டி கவலை தெரிவித்துள்ளார். அடுத்த சில வாரங்களில் ஒமைக்ரானால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தற்போதைய சூழலில் ஒமைக்ரான் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், ஆனால் அது எந்த அளவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை கூற இயலாது என்றும் தெரிவித்துள்ளார். எனினும், இதுவரை அறிந்த வகையில் இந்த புதிய வகை உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் நிச்சயம் மோசமானதாக இருக்கும் என்பது தெரிய வந்திருப்பதாக கூறியுள்ளார். இதற்கிடையே நோய் பரவலை கட்டுப்படுத்த பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 45 சதவிகிதம் பேரும், 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களில் 88 சதவிகிதம் பேரும் மூன்றாவது டோஸ் செலுத்திக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com