கொரோனா வைரஸ்
கொரோனா சிகிச்சைக்கான மாத்திரைக்கு பிரிட்டன் அனுமதி
கொரோனா சிகிச்சைக்கான மாத்திரைக்கு பிரிட்டன் அனுமதி
கொரோனாவை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக கண்டறியப்பட்ட மாத்திரையை கோவிட் நோய் சிகிச்சைக்கு பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளது.
மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனங்கள், இணைந்து கொரோனா சிகிச்சைக்கான மாத்திரையை தயாரித்துள்ளன. 'மோல்நுபிராவிர்' என பெயரிடப்பட்டுள்ள இந்த மாத்திரை, பரிசோதனைகளின் போது இறப்புகளையும், மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கையையும் 50 சதவிகிதம் வரை குறைத்ததாக தெரிகிறது. இந்த மாத்திரைக்கு உலகின் முதல் நாடாக, பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள், தொற்று பாதித்தவர்கள் இந்த மாத்திரையை முதல் ஐந்து நாட்களில் ஒரு நாளைக்கு இருமுறை எடுத்துக் கொள்ளலாம் என பிரிட்டனின் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலும் இந்த மாத்திரையை பயன்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர். தடுப்பூசியை விட மாத்திரையை தயாரிப்பது எளிது என்பதால், விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.