தமிழகத்தில் 14,000-ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு - சென்னையில் 6 ஆயிரத்தை தாண்டியது

தமிழகத்தில் 14,000-ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு - சென்னையில் 6 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் 14,000-ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு - சென்னையில் 6 ஆயிரத்தை தாண்டியது

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 14,000-ஐ தொட்டுள்ளது. நேற்றைய தினம் 12,895 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று 13,990 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இவர்களில் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்தோர் சுமார் 50 பேர் உள்ளனர்.

தமிழகத்தில் ஜனவரி 1ம் தேதி 1,489 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில், 10 நாள் இடைவெளியில் தினசரி தொற்றாளர்கள் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்துள்ளது. அந்தவகையில் இன்றைய தினம் 13,990 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,35,266 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருப்பதாக தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 28,14,276 என்று உயர்ந்துள்ளது.

தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்ததை தொடர்ந்து, சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கையும் 62,767 என உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 8.7 என தொற்று உறுதியாகும் சதவீதம் உயர்ந்துள்ளது. இன்றைய பாதிப்பை பொறுத்தவரை, சென்னையில் மேலும் 6,190 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 1,696 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. திருவள்ளூரில் 1,054 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மாவட்ட வாரியான பாதிப்பின் முழுமையான விவரம், இங்கே:

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 2,547 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27,14,643 என உயர்ந்துள்ளது.

அதேபோல 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,866 என்றாகியுள்ளது. இன்று உயிரிழந்தோரில் அரசு மருத்துவமனைகளில் 8 பேரும், தனியார் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்த போதிலும், உயிரிழப்பு அதிகரிக்காமல் இருப்பது சற்று ஆறுதலளிக்கும் விஷயமாக இருக்கின்றது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com