தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாவது நாளாக சரிவு - சென்னை, கோவையில் அதிக தொற்று
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து இன்றும் குறைந்துள்ளது. அதன்படி நேற்றைய தினம் நேற்று 30,580 என உறுதியாகியிருந்த கொரோனா பாதிப்பு, இன்று 30,215 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் பரிசோதிக்கப்பட்டு தொற்று உறுதியாகும் சதவீதமும் 19.8 என்பதிலிருந்து 19.4 ஆக குறைந்துள்ளது.
தொற்று பாதிப்பு குறைந்து காணப்பட்டாலும்கூட, உயிரிழப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அந்தவகையில் தினசரி கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை, 50 ஐ நெருங்குகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 46 பேர் கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,264 என்றாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 24,639 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதன்மூலம் தற்போது சிகிச்சையிலிருப்போரின் மொத்த எண்ணிக்கை 2,06,484 என்றாகியுள்ளது. இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29,20,457 என்றாகியுள்ளது.
மாவட்ட வாரியாக பார்க்கையில், பாசிட்டிவிட்டி ரேட்டில் நேற்று திருப்பூர் முதலிடத்தில் இருந்த நிலையில் இன்று கோவை அந்நிலையை எட்டியுள்ளது. கோவையில் அதிகபட்சமாக 28.1% என பாசிட்டிவிட்டி ரேட் பதிவாகியுள்ளது. தினசரி பாதிப்பில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்தவகையில் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 6,296 பதிவாகியுள்ளது.
சமீபத்திய செய்தி: 100 ரூபாய்க்கு கீழ் குறைந்த சொமேட்டோ நிறுவன பங்குகள்!