\
27,000 - ஐ நெருங்கியது கொரோனா பாதிப்பு  - பலி எண்ணிக்கை 197 ஆக உயர்வு

27,000 - ஐ நெருங்கியது கொரோனா பாதிப்பு - பலி எண்ணிக்கை 197 ஆக உயர்வு

27,000 - ஐ நெருங்கியது கொரோனா பாதிப்பு - பலி எண்ணிக்கை 197 ஆக உயர்வு
Published on: 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 26,465 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்:

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெளிமாநிலங்களில் இருந்து வந்த 20 பேர் உட்பட 26,465 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6738 ஆக பதிவாகியுள்ள நிலையில் இதில் 6,634 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்தமாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 124 பேரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 73 பேரும் என மொத்தம் 197 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இணை நோய் இல்லாதவர்கள் 47 பேரும் 17 வயது சிறுவன் உயிரிழந்திருப்பது கவனிக்கத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com