\
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனாத் தொற்று உறுதி

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனாத் தொற்று உறுதி

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனாத் தொற்று உறுதி
Published on

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் அவருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தங்கமணியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று மின்சாரத்துறை சார்ந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர் தங்கமணி பங்கேற்றிருந்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மின்சாரத்துறை அமைச்சருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 2 அமைச்சர்கள் உட்‌பட 10 ஏம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிமுகவில் 6 பேர். திமுகவில் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், திருவல்லிக்கேணி எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com