கொரோனா வைரஸ்
தமிழ்நாடு: 1500-ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாடு: 1500-ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,489 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் நேற்று 1155 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 1489 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,49,534 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 8340 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மேலும் 611 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,04,410 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவுக்கு மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.