\
சென்னையில் 167 பேர், கோவையில் 139 பேருக்கு கொரோனா உறுதி: அனைத்து மாவட்டங்களின் முழுவிவரம்

சென்னையில் 167 பேர், கோவையில் 139 பேருக்கு கொரோனா உறுதி: அனைத்து மாவட்டங்களின் முழுவிவரம்

சென்னையில் 167 பேர், கோவையில் 139 பேருக்கு கொரோனா உறுதி: அனைத்து மாவட்டங்களின் முழுவிவரம்
Published on: 

தமிழகத்தில் மேலும் 1,35,760 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அதில் 1,245 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. முன்னதாக நேற்றைய தினம் 1,259 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று அது சற்று குறைந்துள்ளது.

இன்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவர்களில் சென்னையில் 167 பேர், கோவையில் 139 பேர், செங்கல்பட்டில் 92 பேர், ஈரோட்டில் 91 பேர், திருப்பூரில் 71 பேர், தஞ்சையில் 59 பேர், திருவள்ளூரில் 59 பேர், சேலத்தில் 54 பேர், நாமக்கலில் 50 பேர், திருச்சியில் 49 பேர் உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,442 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை 26,33,534 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போதைய சிகிச்சையில் 15,238 பேர் உள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு மருத்துவமனையை சேர்ந்தோர் 12 பேரும், தனியார் மருத்துவமனையை சேர்ந்தோர் 4 பேரும் சிகிச்சை பெற்று வந்திருந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,869 பேராக உயர்ந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com