கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகும் அறிகுறி - சீன ஆய்வு முடிவு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகும் அறிகுறி - சீன ஆய்வு முடிவு
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகும் அறிகுறி - சீன ஆய்வு முடிவு

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் ஒரு அறிகுறியாவது இருப்பதாக லேன்செட் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சீனாவில் கடந்த 2020-ஆம் ஆண்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1192 பேரை இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது கண்காணித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தொற்றின் தாக்கம் எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் உடல்நலமும், மனநலமும் படிப்படியாக தேறுவதாக கூறப்பட்டுள்ளது.

எனினும் சுமார் 55% பேருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் கோவிட் தொற்றின் ஏதாவது ஒரு அறிகுறி இருப்பதாகவும் லேன்செட் தெரிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் பெரும்பாலானோர் தங்களது வேலைகளுக்கு திரும்பினாலும், சாதாரண மக்களைவிட ஆரோக்கியம் குறைவாகவே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com