ஸ்புட்னிக்-வி தடுப்பூசி... சிறப்பு அம்சங்கள் என்னென்ன? - விஞ்ஞானி TV வெங்கடேஸ்வன் விளக்கம்

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி... சிறப்பு அம்சங்கள் என்னென்ன? - விஞ்ஞானி TV வெங்கடேஸ்வன் விளக்கம்
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி... சிறப்பு அம்சங்கள் என்னென்ன? - விஞ்ஞானி TV வெங்கடேஸ்வன் விளக்கம்

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த இரண்டாவது அலையில் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதே இந்த நோயை எதிர்க்க ஒரே தீர்வு என அரசும், மருத்துவர்களும் விழிப்புணர்வு கொடுத்து வருகின்றனர். கடந்த ஜனவரி 16 முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பு மருந்துகள் இந்த பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் ரஷ்ய நாட்டில் உருவாக்கப்பட்ட ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பு மருந்து தற்போது இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வரும் நாட்களில் இந்த தடுப்பு மருந்து இந்தியாவிலேயே பெருமளவில் தயாரிக்கப்பட உள்ளது. 

இந்த ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை விளக்குகிறார் டெல்லியின் முனைவர் விஞ்ஞான் பிரசார் சபாவின் முதுநிலை விஞ்ஞானி T.V. வெங்கடேஸ்வரன். 

“ஸ்புட்னிக்-வி ஒரு நவீன தடுப்பூசி. இந்தியாவின் கோவிஷீல்ட் மற்றும் ஸ்புட்னிக்-வி என இரண்டும் புதிய தொழில்நுட்பத்தை பின்பற்றி தயாராகி உள்ள தடுப்பு மருந்துகள். இதில் கோவிஷீல்டில் ஒரே வைரஸை தான் இரண்டு டோஸ்களிலும் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியில் முதல் டோஸூக்கு ஒரு வைரஸும், இரண்டாவது டோஸூக்கு வேறொரு வைரஸும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடினோ வைரஸ் என்ற வைரஸின் வெவ்வேறு உருமாற்றங்களை கொண்டது. இதனால் உடலில் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. 

இரண்டு டோஸூக்கும் இடையே 21 நாட்கள் வரை இடைவெளி விடலாம். மறுபக்கம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள எந்தவித தயக்கமும் இல்லாமல் எல்லோரும் அவசியம் முன்வர வேண்டும். இதன் மூலம் கொரோனா தடுப்பூசி அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் நீடித்த ஆயுள் பெறலாம். 

ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்து இப்போதைக்கு 35 நகரங்களில் மட்டுமே கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. ஏன் என்றால் அந்த மருந்தை -18 டிகிரியில் வைத்து பாதுக்காக்க வேண்டி உள்ளது. அதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வைத்து ஸ்புட்னிக்-வி செலுத்த முடியாது. வரும் நாட்களில் இந்த நிலை மாறும்” என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com