கொரோனா வைரஸ்
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: மதுரையில் விரைந்து நிரம்பும் ஆக்சிஜன் படுக்கைகள்
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: மதுரையில் விரைந்து நிரம்பும் ஆக்சிஜன் படுக்கைகள்
மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம் மட்டுமல்லாமல் விருதுநகர், ராமநாதபுரம், உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்காக மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதிக அளவில் அனுமதிக்கப்படுவதால் படுக்கை வசதிக்கான தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது,
படுக்கை வசதிகள் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும், அதேபோல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் தேவை உள்ளதால் ஆக்சிஜன் படுகைகள் நிரம்பி வருவதால் ஆக்சிஜன் தேவைக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது, எனவே ஆக்சிஜன் தடையின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

