\
திருவாரூர் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் 7 பேருக்கு கொரோனா

திருவாரூர் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் 7 பேருக்கு கொரோனா

திருவாரூர் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் 7 பேருக்கு கொரோனா
Published on

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் ஏழு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தற்போது மெல்ல குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா உருமாறி ஒமைக்ரானாக தற்போது நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் திருவாரூர் மாவட்டத்தில் 3 நபர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. நேற்று அவர்களுடைய ஆய்வு முடிவுகள் சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. விரைவில் அவர்களுக்கான முடிவுகள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com