சத்தியமங்கலம்: வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

சத்தியமங்கலம்: வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

சத்தியமங்கலம்: வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்
Published on

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சத்தியமங்கலம் நகராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 32 ஆயிரம் பேர் உள்ள நிலையில், இதுவரை 90 சதவிகிதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மெகா முகாம்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், தற்போது விடுபட்டோருக்கு வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எனவே தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 100 சதவிகிதத்தை விரைவில் எட்டும் என வட்டார மருத்துவ அலுவலர் கணேசன் தெரிவித்துள்ளார்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பகுதியில் தினந்தோறும் ஒரு கிராமத்தில் முகாமிட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com