10 மாதக் குழந்தைக்கு சானிடைசர் கலந்த தண்ணீர் - கொரோனா விபரீதம்

10 மாதக் குழந்தைக்கு சானிடைசர் கலந்த தண்ணீர் - கொரோனா விபரீதம்
10 மாதக் குழந்தைக்கு சானிடைசர் கலந்த தண்ணீர் - கொரோனா விபரீதம்

திரிபுராவின் உனகோட்டி மாவட்டத்தில் சோனாய்முரி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு சுகாதார மையத்தில் 10 மாத ஆண் குழந்தைக்கு சானிடைசர் கலந்த தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரிப்பதன்பேரில் ஏ.எஸ்.ஹெச்.ஏ தொழிலாளி இந்த செயலை செய்துள்ளார்.

அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் தனது குழந்தைக்கு செவ்வாய்க்கிழமையன்று போலியோ தடுப்பூசி போட சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். தடுப்பூசிக்குப் பிறகு குழந்தையின் தாகத்திற்கு அங்கிருந்த புஷ்பாதாஸிடன் தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீரைக் குடித்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். 

அங்கு சோதித்துப் பார்த்ததில் பாட்டில் தண்ணீரில் சானிடைசர் கலந்திருந்தது தெரியவந்தது. குழந்தையின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

இதுகுறித்து அந்த குழந்தையின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. கொரோனா தொற்று பரவாமல் இருக்க தண்ணீரில் சானிடைசர் கலந்ததாகவும், ஆனால் குழந்தைக்குக் கொடுத்த தண்ணீரில் சானிடைசர் கலந்திருந்தது புஷ்பாவிற்கு தெரியாது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என குமர்காட் காவல் நிலையாதிகாரி ப்ரதியோத் தத்தா கூறியுள்ளார்.

திரிபுராவின் தலைநகரிலிருந்து 133 கி.மீ தொலைவில் இந்த கிராமம் அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com