\
ஆன்லைனில் முன்பதிவு செய்த தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னையில் ரெம்டெசிவிர் விற்பனை!

ஆன்லைனில் முன்பதிவு செய்த தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னையில் ரெம்டெசிவிர் விற்பனை!

ஆன்லைனில் முன்பதிவு செய்த தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னையில் ரெம்டெசிவிர் விற்பனை!
Published on: 

தமிழகத்தின் 7 மாவட்டங்களை சேர்ந்த தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்யப்படுகிறது.

 திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் மருத்துவமனைகளுக்கு, சென்னை அண்ணா நகர் பகுதியிலுள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திலிருந்து மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது.

 ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்த மருத்துவமனைகளுக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. நோயாளிகளின் விவரத்தைக் கொடுத்து மருந்துகளை பெற்றுக் கொள்கின்றனர். மேலும் மருந்து வாங்குபவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர் பதிவு செய்து வைத்துக் கொள்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com