கொரோனா: ரஷ்ய தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம்..!

கொரோனா: ரஷ்ய தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம்..!

கொரோனா: ரஷ்ய தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம்..!

ரஷ்ய நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக்-V கொரோனா வைரஸ் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் முன்னணியில் உள்ளன. அதேவேளையில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதிலும் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை சோதனை செய்து வருகின்றன.

இந்நிலையில் ரஷ்ய நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக்-V கொரோனா வைரஸ் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் இதற்காக ரஷ்ய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் இந்த தடுப்பூசிக்கான சோதனைகளை இந்தியாவில் நடத்தும். இந்த சோதனைகளுக்கு பிறகு இந்த தடுப்பூசியை இந்தியாவிலேயே தயாரிக்க தொழில்நுட்பத்தை ரஷ்ய நிறுவனங்கள் அளிக்கும்.

இதன் மூலமாக இந்தியாவிலேயே 30 கோடி கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் தயாரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதிலே 10 கோடி தடுப்பூசிகள் இந்திய சந்தையில் விற்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே ரஷ்ய தடுப்பூசி சோதனை இந்தியாவிலேயே வெற்றி பெற்றால், அதைத்தொடர்ந்து இந்தியாவில் 10 கோடி நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com