கோவிட்-19 தடுப்பூசி தயாரிப்புக்கு இந்தியாவுடன் கைகோர்க்க முன்வரும் ரஷ்யா

கோவிட்-19 தடுப்பூசி தயாரிப்புக்கு இந்தியாவுடன் கைகோர்க்க முன்வரும் ரஷ்யா
கோவிட்-19 தடுப்பூசி தயாரிப்புக்கு இந்தியாவுடன் கைகோர்க்க முன்வரும் ரஷ்யா

கொரோனா வைரஸ் தடுப்பூசி ஸ்பூட்னிக் வி தயாரிப்புக்காக இந்தியாவுடன் கைகோர்க்க ரஷ்யா முன்வருவதாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின்(ஆர்.டி.ஐ.எஃப்) தலைமை நிர்வாக அதிகாரி கிரில் ட்மிட்ரிவ் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது நாடு முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அறிவித்திருந்தார். மேலும் அது திறம்ட செயல்படுவதாகவும், நிலையான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

கமாலெயா ஆராய்ச்சி நிறுவனம் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனம், ஆர்.டி.எஃப் உடன் இணைந்து ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இது இன்னும் மூன்றாவது அளவில் அல்லது பெரிய அளவில் சோதனை செய்யப்படவில்லை.

இதுகுறித்து டிமிட்ரிவ், ’’லத்தீன், அமெரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் தடுப்பூசி தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. தற்போது தடுப்பூசி உற்பத்திதான் மிக முக்கிய பிரச்னை. தற்போது நாங்கள் இந்தியாவுடன் கூட்டணி தேடுகிறோம். கமாலெயா தடுப்பூசியை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிடமும் இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் இந்த கூட்டணி தடுப்பூசி தயாரிப்புக்கான எங்கள் கோரிக்கையை ஈடுகட்ட உதவும் என்பதை முக்கியமாக சொல்லவேண்டும். இதில் சர்வதேச ஒத்துழைப்பை ரஷ்யா எதிர்நோக்கியுள்ளது’’ என்று கூறியுள்ளார்.

மேலும், ரஷ்யாவில் மட்டுமல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, பிரேசில் மற்றும் இந்தியாவிலும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார். ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் தடுப்பூசி தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஆசியா, லத்தீன் அமெரிக்கா, இத்தாலி மற்றும் உலகின் பிற பகுதிகளிலிருந்தும் அதிக தேவை உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஜி.ஆர்.ஐ.இ யின் இயக்குநர் அலெக்சாண்டர் கின்ஸ்பெர்க் இதைப்பற்றிக் கூறுகையில், தடுப்பூசி பரிசோதனையில் 20,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளதாகவும், மனித அடினோ செரோடைப்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த தடுப்பூசி மிகத் தெளிவான நன்மையைக் கொண்டுள்ளதாகக் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com