கொரோனா தடுப்பு மருந்து : ஆக்ஸ்போர்டு சோதனை வெற்றி
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சோதனை வெற்றி பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உட்பட உலகின் பல நாடுகள் அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. இந்நிலையில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக்குழு கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளது.
தற்போது அந்த தடுப்பு மருந்து பரிசோதனைக்காக வெளியிடப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்து மிகவும் பாதுகாப்பானது எனவும், நோய் எதிர்ப்புத்திறன் கொண்டிருப்பதாகவும், நன்கு தாக்குப்பிடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1077 பேருக்கு தடுப்பு மருந்து, செலுத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பது சோதனையில் உறுதியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.