"கொரோனா சிகிச்சை பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் நீக்கப்படும்": டெல்லி மருத்துவர் கருத்து

"கொரோனா சிகிச்சை பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் நீக்கப்படும்": டெல்லி மருத்துவர் கருத்து

"கொரோனா சிகிச்சை பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் நீக்கப்படும்": டெல்லி மருத்துவர் கருத்து
Published on

ரெம்டெசிவிர் மருந்துகள் கொரோனாவுக்கான சிகிச்சைப்பட்டியலில் இருந்து நீக்கப்படும் என டெல்லி மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.

கொரோனாவுக்கான மருந்துகளில் மிக அதிகமான தேவையை ஏற்படுத்தியிருப்பது ரெம்டெசிவிர் மருந்துகள்தாம். ஆனால் கொரோனாவிலிருந்து ஒருவரை குணப்படுத்தும் விகிதம் குறைவாக இருப்பதால், விரைவில் இதற்கு தரப்படும் முன்னுரிமை குறையும் என்றும், இதன் விநியோகம் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் டெல்லியை சேர்ந்த கங்காராம் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் ராணா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பேசியிருக்கும் அவர், “கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் அளித்துக்கொண்டிருக்கும் மருந்துகளோடு ஒப்பிடுகையில், இந்த ரெம்டெசிவிர் மருந்து தரும் பலன்கள் மிக மிக குறைவாக இருக்கிறது. அதனால்தான் இம்மருந்தை கைவிடுவது பற்றி ஆலோசனை செய்தோம்” எனக்கூறியுள்ளார்.

மேலும், “பிளாஸ்மா தெரபி, ரெம்டெசிவிர் போன்றவையாவும் சோதனை அடிப்படையிலேயே கொரோனா நோயாளிகளுக்கு தரப்படுகிறது. இப்போதைக்கு, குறிப்பிட்ட மூன்று மருந்துகள் மட்டுமே கொரோனாவுக்கு நல்ல பலனை தருகிறது” எனக்கூறியுள்ளார்.

முன்னராக இந்திய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சங்கம் சார்பில், முறையாக பலன் தரவில்லை என்ற காரணத்தினால் கொரோனாவுக்கு பிளாஸ்மா தெரபியை சிகிச்சையாக அளிக்கும் முறையை கைவிடும் அறிவிப்பு நேற்றைய தினம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதிலேயே இவ்வளவு சவால்கள் இருந்துவரும் நிலையில், இந்தியாவில் கூடுதலாக கருப்பு பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது தீவிரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அளிக்கப்படும் அதிகப்படியான ஸ்டீராய்ட்ஸ் காரணமாக ஏற்படும் பக்கவிளைவாகவும். இந்த பக்கவிளைவு, குறிப்பாக டெல்லியில் கடந்த சில தினங்களாக அதிகமான நபர்களுக்கு ஏற்படுகிறது. இதனால் அங்கு மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கான சிகிச்சைக்காக நேற்றைய தினம் விற்பனை சந்தைக்கு வந்திருக்கும் 2 -டி.ஜி.மருந்தாவது மேற்கூறிய சிக்கல்களை தடுக்க உதவும் என எதிர்ப்பார்க்கின்றனர் அதிகாரிகள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com