கொரோனா பாதிப்பின் திடீர் உயர்வுக்குக் காரணம் இதுதானா?: மருத்துவர் விளக்கம்
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6785 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்து டிஸ்ஜார்ஜ் ஆகியவர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட ஒரே அளவில் உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு வரை 5 ஆயிரத்திற்குள் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்த இரண்டு நாட்களில் மடமடவென அதிகரித்து 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இந்த திடீர் உயர்வுக்கான காரணம் பற்றி பொதுநல மருத்துவர் பிரசாத் தாமரைக் கண்ணன் கூறியபோது, ‘’பொதுவாக காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும்போது வைரஸ் பரவலின் வேகமும் அதிகமாக இருக்கும். கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் வானம் மேக மூட்டத்துடனும், பல இடங்களில் மழையும் பெய்துவருகிறது. கொரோனா பரவலின் வேகம் அதிகரித்ததற்கு முக்கிய காரணம் இதுவெனக் கூறலாம்.
பொதுவாக எந்தவொரு நோயாக இருந்தாலும் 60 முதல் 70 சதவீதம் பேரை பாதித்து பின்புதான் படிப்படியாகக் குறையும். அது போலத்தான் கொரோனாவும். 10 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரம்வரை பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து பின்புதான் படிப்படியாகக் குறையும். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் பாதிப்பு எண்ணிக்கைவிட குணமாகி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகத்தான் உள்ளது’’ என்கிறார்.