\
பிரதமருடன் மேடையில் பங்கேற்றிருந்த ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிக்கு கொரோனா

பிரதமருடன் மேடையில் பங்கேற்றிருந்த ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிக்கு கொரோனா

பிரதமருடன் மேடையில் பங்கேற்றிருந்த ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிக்கு கொரோனா
Published on

அயோத்தியில் நடந்த ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் மேடையில் பங்கேற்ற ராமர் கோயில் அறக்கட்டளை தலைமை நிர்வாகிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் 5-ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் நிறுவுவதற்கான பூமி பூஜையானது நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உட்பட பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பிரதமர் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் மேடையில் பங்கேற்றிருந்த ராமர் கோயில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் தாஸூக்கு தற்போது கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேடையில் பிரதமர் மோடிக்கு மிக அருகாமையில் தாஸ் நின்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com