ராஜபாளையம்: நகராட்சி முன்னாள் சேர்மன் கொரோனாவால் உயிரிழப்பு

ராஜபாளையம்: நகராட்சி முன்னாள் சேர்மன் கொரோனாவால் உயிரிழப்பு

ராஜபாளையம்: நகராட்சி முன்னாள் சேர்மன் கொரோனாவால் உயிரிழப்பு
Published on

ராஜபாளையம் நகராட்சியின் முன்னாள் சேர்மன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்று நள்ளிரவு உயிரிழந்தார்.

ராஜபாளையம் நகராட்சியின் முன்னாள் சேர்மன் தனலட்சுமி. மூச்சுத்திணறல் இளைப்பு காரணமாக கடந்த சில நாட்களாக சத்திரப்பட்டி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com