\
இந்தியாவில் அதிகரிக்கிறதா கொரோனா பாதிப்பு? கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எவ்வளவு?

இந்தியாவில் அதிகரிக்கிறதா கொரோனா பாதிப்பு? கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எவ்வளவு?

இந்தியாவில் அதிகரிக்கிறதா கொரோனா பாதிப்பு? கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எவ்வளவு?
Published on

நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 72 ஆயிரத்தை கடந்தது என மத்திய சுகாதாரத்துறை தகவல்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள் படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 12,899 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் இன்று மட்டும் 8,518 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர். இதுவரை மொத்தமாக 4,26,99,363 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இன்று மட்டும் 15 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர்.

மொத்த உயிரிழப்பு 5,24,855 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 72,474 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.62 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.21 ஆகவும் உள்ளது. நேற்று மட்டும் நாட்டில் 13,24,591 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 1,96,14,88,807 டோஸ்கள் இந்தியா முழுவதும் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com