சரியான ஆம்புலன்ஸ் கிடைக்காததால் கொரோனா பாதித்த பத்திரிகையாளர் பரிதாப உயிரிழப்பு

சரியான ஆம்புலன்ஸ் கிடைக்காததால் கொரோனா பாதித்த பத்திரிகையாளர் பரிதாப உயிரிழப்பு
சரியான ஆம்புலன்ஸ் கிடைக்காததால் கொரோனா பாதித்த பத்திரிகையாளர் பரிதாப உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் சி.ஓ.இ.பியில் புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்போ பராமரிப்பு நிலையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த, மராத்தி செய்தி சேனலில் பணியாற்றி வந்த 42 வயது பத்திரிகையாளர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக புனே மாநகராட்சி ஆணையர் விக்ரம் குமார் கூறியுள்ளார்.

இதய சிகிச்சை ஆம்புலன்ஸ் கிடைக்காதது குறித்து விசாரிக்குமாறு துணை முதல்வர் அஜித் பவார் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தேஷ்முக்கிடம் தெரிவித்துள்ளார். அகமது நகர் மாவட்டத்திலிருந்து பத்திரிகையாளரை ஆம்புலன்ஸில் கொண்டு வந்ததாகவும், ஜம்போ பராமரிப்பு நிலையத்தில் அவரை அனுமதித்தகாவும், அங்கு அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தனக்கு தகவல் கிடைத்ததாக அவர் கூறினார்.

இதய சிகிச்சை வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் கிடைத்திருந்தால் பத்திரிகையாளர் உயிர்பிழைத்திருப்பார் என அவர் சகோதரி கூறியுள்ளார். மேலும் 800 படுக்கைகள்கொண்ட ஜம்போ நிலையத்தின் நிர்வாகத்தின்மீது குற்றம் சாட்டியுள்ளார். இது பயிற்சி மருத்துவர்களால் நிர்வகிக்கப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவரது சகோதரருக்கு உணவு மற்றும் மருந்து அனுப்பியும், அது அவரைச் சேரவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இறந்த நிருபரின் சக ஊழியர், மருத்துவமனையில் அனுமதித்த அடுத்த நாளே அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும், அதனால் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற இருந்ததாகவும், செவ்வாய்க்கிழமை இரவு அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அந்த மருத்துவமனையிலெயே ஐசியுவில் வைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என கூறியுள்ளார். மேலும் ஆம்புலன்ஸ் கிடைத்து இருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்கலாம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இதய வசதிகள்கொண்ட ஆம்புலன்ஸ் புதன்கிழமைதான் வரவிருந்ததாகவும், அதற்குமுன்பே இன்று அதிகாலை 5.3 மணியளவில் அவர் இறந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜம்போ வசதிகளை அமைப்பதில் மாநில அரசுதான் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் பராமரிப்பு மற்றும் பொறுப்பு அரசாங்கம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்திடம் இருக்கிறது. இது அவர்களின் கவனக்குறைவு மற்றும் வசதி பற்றாக்குறையால்தான் ஏற்பட்டுள்ளது என பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் படேல் கூறியுள்ளார்.

இந்த ஜம்போ மையத்தில் 8 முதல் 9 பேர் இறந்துவிட்டதாகவும், தேவையான மருத்துவ வசதிகள் இல்லை எனவும் எம்.எல்.ஏ சித்தார்த் ஷிரோல் தெரிவித்துள்ளார். புனேவில் கடந்த 5 மாதங்களில் மருத்துவ வசதிகளை வழங்க மாநில அரசு தவறிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com