\
புதுச்சேரி: மக்கள் நீதி மய்யம் மாநில தலைவர் சுப்ரமணியன் கொரோனாவுக்கு உயிரிழப்பு

புதுச்சேரி: மக்கள் நீதி மய்யம் மாநில தலைவர் சுப்ரமணியன் கொரோனாவுக்கு உயிரிழப்பு

புதுச்சேரி: மக்கள் நீதி மய்யம் மாநில தலைவர் சுப்ரமணியன் கொரோனாவுக்கு உயிரிழப்பு
Published on

புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் மாநில தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான டாக்டர் சுப்ரமணியன் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.

புதுச்சேரி மக்கள் நீதி மய்ய மாநில தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான டாக்டர் சுப்ரமணியன் (70) கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

இவர் 1985-90 ல் உருளையன்பேட்டை தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினராகவும், 2001-ம் ஆண்டு முதல் 2011 வரை முதலியார்பேட்டை தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். 2012-2014 வரை திமுக அமைப்பாளராக இருந்த இவர் 2018-ம் ஆண்டு முதல் மக்கள் நீதி மையத்தின் மாநில தரைவராக இருந்து வந்தார். கொரோனா தொற்றால் உயிரிழந்த இவருக்கு முதலமைச்சர் நாராயணசாமி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com