கொரோனா வைரஸ்
"அரசியல் தலைவர்கள் நினைத்தால் அனைத்து நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி”- WHO
"அரசியல் தலைவர்கள் நினைத்தால் அனைத்து நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி”- WHO
சர்வதேச அரசியல் தலைவர்கள் மற்றும் மருந்து நிறுவன முதலாளிகள் நினைத்தால் அனைத்து நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
பணக்கார நாடுகள் தேவைக்கு அதிகமாக கொரோனா தடுப்பூசிகளை வாங்கி வைத்துள்ளதால் ஏழை நாடுகளில் மக்கள் ஒரு தவணை தடுப்பூசி கூட கிடைக்காமல் தவிக்கின்றனர் என பரவலாகக் குற்றச்சாட்டு நீடிக்கிறது.
இந்தச் சூழலில் 20 அரசியல் தலைவர்கள், மருந்து நிறுவன முதலாளிகள் நினைத்தால் இந்த நிலையை சரி செய்ய முடியும் என உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி புரூஸ் அயில்வார்டு கூறியுள்ளார். சர்வதேச அளவில் இதற்கான முன்னெடுப்பை எடுத்தால் மட்டுமே அனைத்து நாடுகளிலும் குறைந்தது 10 விழுக்காடு மக்களுக்காவது கொரோனா தடுப்பூசி கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.