\
முழு ஊரடங்கு: தமிழக புதுச்சேரி எல்லையில் காவல்துறை கண்காணிப்பு தீவிரம்

முழு ஊரடங்கு: தமிழக புதுச்சேரி எல்லையில் காவல்துறை கண்காணிப்பு தீவிரம்

முழு ஊரடங்கு: தமிழக புதுச்சேரி எல்லையில் காவல்துறை கண்காணிப்பு தீவிரம்
Published on: 

தமிழ்நாட்டில் முழு பொதுமுடக்கம் இன்று அமலில் உள்ள நிலையில் புதுச்சேரி மாநிலத்தின் தமிழக எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்றைய தினம் முழு பொதுமுடக்கம் அமலில் உள்ள இந்த நேரத்தில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்ட எல்லைகளில் தமிழ்நாடு காவல்துறையினர் தீவிரமாக வாகனங்களை கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக எல்லைகளில் தடைகள் அமைத்து, தமிழ்நாட்டிற்குள் நுழைய முற்படும் வாகனங்களை திருப்பி விடுகின்றனர்.

இதேபோல காரைக்கால் மாவட்ட எல்லை, புதுச்சேரி-சென்னை புறவழிச்சாலை, மொரட்டாண்டி சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இப்பகுதிகளெல்லாம் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com