\
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா: இன்று மாலை பிரதமர் முக்கிய ஆலோசனை

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா: இன்று மாலை பிரதமர் முக்கிய ஆலோசனை

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா: இன்று மாலை பிரதமர் முக்கிய ஆலோசனை
Published on

இந்தியாவில் கொரோனா தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். பிரதமர், இன்று மாலை 4:30 மணியளவில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பானது, கடந்த 24 மணி நேரத்தில் 1.5 லட்சத்தை தாண்டியுள்ளது குறிப்பித்தக்கது. ஒமைக்ரான் காரணமாக கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதால், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ஆலோசிப்பார் என தெரிகிறது. மேலும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதால், கொரோனா பாதிப்பை தடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

நாட்டில் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மீண்டும் நாடு தழுவிய அளவில் ஏதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுமா என கேள்வியும் எழுந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com