`கொரோனா இன்னும் முடியவில்லை... பாதுகாப்பாக இருங்கள்’- மக்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

`கொரோனா இன்னும் முடியவில்லை... பாதுகாப்பாக இருங்கள்’- மக்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

`கொரோனா இன்னும் முடியவில்லை... பாதுகாப்பாக இருங்கள்’- மக்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை
Published on

குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் காணொலி வாயிலாக கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, `கொரோனா வைரஸ் நம்மை விட்டு இன்னும் முழுமையாக அகலவில்லை; மீண்டும் அது உருமாறி பரவி வருகிறது. மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு எதிரான தங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிறுத்திவிட வேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.

குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் காணொலி பேசிய பிரதமர் மோடி, “கொரோனா மீண்டும் மீண்டும் வரும் தன்மையுடன் இருக்கிறது. பொதுமக்கள் உதவியுடன் தற்போதுவரை நாட்டில் கொரோனா பரவலை தடுக்க, சுமார் 185 கோடி தடுப்பூசிகள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து விவசாயிகள் குறித்து அவர் பேசுகையில், குஜராத்தில் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும், இயற்கை விவசாயத்தை நோக்கி விவசாயிகள் முதல் அடியை எடுத்துவைக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து பேசுகையில், “இந்தியாவின் 75-வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடும் வகையில் திட்டமிடப்படும் Azadi Ka Amrit Mahotsav திட்டத்தின்மூலம், 75 அம்ரித் சர்வோரஸ் (ஏரிகள்) கட்டமைக்க பங்கு கொள்ள வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com