ஒமைக்ரான் பரவல்: பிரதமர் மோடியின் ஐக்கிய அமீரக பயணம் ஒத்திவைப்பு

ஒமைக்ரான் பரவல்: பிரதமர் மோடியின் ஐக்கிய அமீரக பயணம் ஒத்திவைப்பு
ஒமைக்ரான் பரவல்: பிரதமர் மோடியின் ஐக்கிய அமீரக பயணம் ஒத்திவைப்பு

கொரோனாவின் புதிய திரிபான ஒமைக்ரான் பரவல் தொடர்பான அச்சம் காரணமாக பிரதமர் மோடியின் அமீரகப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

துபாய் எக்ஸ்போவில் பங்கேற்பதற்காக வருகிற 6-ஆம் தேதி பிரதமர் மோடி துபாய் செல்ல இருந்தார். 2022-ஆம் ஆண்டில் பிரதமரின் முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்த துபாய் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் எதிர்பாரா சூழ்நிலை காரணமாக தற்போது பிரதமரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின்போது இந்தியா - ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையேயான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை இருநாட்டு தலைவர்களும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், பிரதமர் மோடியும் ஐக்கிய அரபு அமீரக தலைவர்களும் விவாதிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்தப் பயணம் தள்ளிப்போயுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com