\
கொரோனா வார்டில் சுற்றித் திரிந்த பன்றிகள் - அதிர்ச்சியடைந்த நோயாளிகள்

கொரோனா வார்டில் சுற்றித் திரிந்த பன்றிகள் - அதிர்ச்சியடைந்த நோயாளிகள்

கொரோனா வார்டில் சுற்றித் திரிந்த பன்றிகள் - அதிர்ச்சியடைந்த நோயாளிகள்
Published on: 

கர்நாடகா மாநிலம் கர்பூர்கியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பன்றிகள் சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளிவந்த சில நாட்களில் ரைச்சூர் மாவட்ட மருத்துவமனையில் பன்றிகள் சுற்றித் திரிந்த மற்றொரு சம்பவமும் வெளிவந்துள்ளது.

இதுபற்றி மருத்துவமனையில் உள்ளவர்கள் புகார் கொடுத்தபின்னர், அதிகாரிகள் பன்றி உரிமையாளர் மீது புகார் கொடுத்தனர். இதனால் நகராட்சி அதிகாரிகள் பன்றிகளைப் பிடித்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக ரைச்சூர் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு புகார்கள் வந்ததை அடுத்து, தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் விதமாக பன்றிகளை உலாவ விட்டதற்காக பன்றி உரிமையாளர் மீதும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com