இந்தியாவில் 12-18 வயதினருக்கான கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்

இந்தியாவில் 12-18 வயதினருக்கான கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்
இந்தியாவில் 12-18 வயதினருக்கான கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்

12 முதல் 18 வயது உள்ளவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியாவில் 2லிருந்து 8 வயது, 8லிருந்து 14 வயது மற்றும் 12லிருந்து 18 வயதினர் என பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிசோதனையானது டெல்லி எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மருத்துவமனைகளில் நடைபெற்று வந்தது.

மிக விரிவான பரிசோதனைகளாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இந்த பரிசோதனை நடைபெற்று வந்தது. மற்ற தடுப்பூசிகளைவிட கோவாக்சின் தடுப்பூசி சிறுவர்களிடையே குறைந்த அளவே பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதும் நல்ல பலனை அளித்ததும் முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்தது.

இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை இந்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பியிருந்தனர். பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு தற்போது 12 முதல் 18 வயதினருக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை செலுத்த மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com