பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா

பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா

பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா
Published on

பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 946ஆக இருந்தது. குணமடைந்தோர் எண்ணிக்கை 288 ஆகவும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 655 ஆகவும் இருந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக இருந்தது.

இந்நிலையில், பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவரது மகன் மற்றும் உதவியாளருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com