அதிகரிக்கும் கொரோனா: கோவையில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு பற்றாக்குறை

அதிகரிக்கும் கொரோனா: கோவையில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு பற்றாக்குறை
அதிகரிக்கும் கொரோனா: கோவையில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு பற்றாக்குறை

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 3000-க்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 3944 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது வரை மொத்தமாக 1,38,593 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரத்தில் மாவட்டத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1000-க்கு குறைவாக இருந்த நிலையில் தற்போது 29,000-ஐ தாண்டி சிகிச்சைகளில் இருக்கிறார்கள். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் தொடர்ந்து அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com