இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று சற்று அதிகரித்து 24 மணி நேரத்தில் 41,806 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 9 லட்சத்து 87 ஆயிரத்து, 880 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 39 ஆயிரத்து 130 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றுக்காக 4 லட்சத்து 32 ஆயிரத்து 41 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 மணி நேரத்தில் 581 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கின்றனர்.
இதனால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 11 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று பரவில் விகிதம் 2.15 ஆக உள்ளது. இதுவரை 39.13 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.