தமிழகத்தில் கொரோனாவுக்கு 18 வயது இளம்பெண் பலி - 3 மாதங்களுக்கு பிறகு உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனாவுக்கு 18 வயது இளம்பெண் பலி - 3 மாதங்களுக்கு பிறகு உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனாவுக்கு 18 வயது இளம்பெண் பலி - 3 மாதங்களுக்கு பிறகு உயிரிழப்பு

3 மாதங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் நேற்று ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில் இன்று ஒரேநாளில் 476 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டு 1938 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34,58,445ஆக உள்ளது. 

18 வயது இளம்பெண் நேற்று (14 ஆம் தேதி) தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சளி,  காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதே நாளில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.  மார்ச் 10 ஆம் தேதிக்குப் பிறகு அதாவது 3 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் கொரோனா உயிரழப்பு பதிவாகியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 38,026ஆக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com