ஓமைக்ரான் பரவல்: மகாராஷ்டிராவிலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

ஓமைக்ரான் பரவல்: மகாராஷ்டிராவிலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

ஓமைக்ரான் பரவல்: மகாராஷ்டிராவிலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
Published on

மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஒடிஷாவை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மற்றும் ஒரே இடத்தில் அதிகளவு மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்படுவதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது. சொகுசு விடுதிகள், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள், பூங்காக்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் இதுவரை 4 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை, பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், உடற்பயிற்சி கூடம், ஸ்பாக்களில் 50 சதவீத பேருக்கு மட்டும் அனுமதி என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com