\
“கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள்”-ஓமைக்ரான் பரவல் குறித்து மருத்துவத்துறை செயலாளர் உத்தரவு

“கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள்”-ஓமைக்ரான் பரவல் குறித்து மருத்துவத்துறை செயலாளர் உத்தரவு

“கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள்”-ஓமைக்ரான் பரவல் குறித்து மருத்துவத்துறை செயலாளர் உத்தரவு
Published on: 

ஓமைக்ரான் பரவல் எதிரொலியாக கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மருத்துவத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

சர்வதேச விமான நிலையத்தில் ஏற்கனவே தொடர்ந்து வெளி நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு RT PCR பரிசோதனையும், காய்ச்சல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தென் ஆப்ரிக்கா, இஸ்ரேல், உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து வருவோரை மீண்டும் 8 நாட்களுக்குப் பின் பரிசோதிக்குமாறும் , அவர்களை தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தும்படியும் ஏற்கனவே மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கண்காணிப்பை தீவிரப்படுத்தும் படி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு மருத்துவத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், கோவிட் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தவும், பரிசோதனைகளை குறைக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com