தென் ஆப்ரிக்காவில் குறைந்து வரும் ஒமைக்ரான் பாதிப்பு

தென் ஆப்ரிக்காவில் குறைந்து வரும் ஒமைக்ரான் பாதிப்பு

தென் ஆப்ரிக்காவில் குறைந்து வரும் ஒமைக்ரான் பாதிப்பு
Published on

‌‌‌தென் ஆப்ரிக்கா‌வில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கு கடந்த வியாழக்கிழமை தினசரி கொரோனா பாதிப்பு 27 ஆயிரமாக இருந்த நிலையில், செவ்வாய்கிழமை 15 ஆயிரமாக குறைந்துள்ளது. இதனால் ஒமைக்ரானால் ஏற்பட்ட புதிய கொரோனா அலையின் உச்சத்தை தென் ஆப்ரிக்கா கடந்துவிட்டதாக அந்நாட்டு மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குறிப்பாக வைரஸ் பரவல் மையமாக இருந்த Gauteng மாகாணத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 10 நாட்களில் 16 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமாக குறைந்துள்ளது எனக் கூறுகின்றனர். ஒமைக்ரானால் பெருமளவு உயிரிழப்புகள் நேரவில்லை எனத் தெரிவித்துள்ள மருத்துவர்கள், தீவிர பாதிப்படைந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com