உ.பி: கொரோனா வார்டில் வேலை செய்ய வற்புறுத்தியதால் மாடியிலிருந்து குதித்த நர்ஸிங் மாணவி

உ.பி: கொரோனா வார்டில் வேலை செய்ய வற்புறுத்தியதால் மாடியிலிருந்து குதித்த நர்ஸிங் மாணவி
உ.பி: கொரோனா வார்டில் வேலை செய்ய வற்புறுத்தியதால் மாடியிலிருந்து குதித்த நர்ஸிங் மாணவி

உத்தர பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் உள்ள வருண் அர்ஜுன் மருத்துவக் கல்லூரியில் ஒரு நர்ஸிங் மாணவியை கொரோனா வார்டில் பணியுரிய வற்புறுத்தியுள்ளனர்.

அதற்கு முன்பே அந்த பெண் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அதில் அவரை ஒரு கொரோனா வார்டில் பணிக்கு அமர்த்தியுள்ளனர். அவருக்கு சுகாதார காப்பீடு இல்லாததால் அந்த பெண் பணிக்கு செல்ல மறுத்துவிட்டார். மேலும் சம்பள உயர்வும் கோரியுள்ளார்.

மருத்துவர்கள் அதை மறுக்கவே மனமுடைந்த அவர் முதல் மாடியிலிருந்து கீழே குதித்தார். இதனால் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஐ.சியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என போலீஸ் எஸ்.பி ஆனந்த் தெரிவித்துள்ளார். 

கொரோனா வார்டில் வேலை செய்ய மறுத்ததால் அந்த பெண் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வீடியோ ஆதாரங்களின்படி அவர் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக புகார் அளித்துள்ளதால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதாக மாவட்ட மாஜிஸ்திரேட் இந்திரா விக்ரம் சிங் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com