
பிரிட்டனில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக இங்கு நாளொன்றுக்கு சராசரியாக 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் வரை புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். தினசரி உயிரிழப்புகளும் 100க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. கடந்த ஜூலை மாதம் கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசு, முகக்கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்டவற்றை கட்டாயமாக்கவில்லை. இதுவும் வைரஸ் பரவல் அதிகரிக்க காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.