கொரோனா வைரஸ்
கொரோனா: புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பாலன் உயிரிழப்பு
கொரோனா: புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பாலன் உயிரிழப்பு
புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பாலன் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பாலனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 23ஆம் தேதி அவர் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பாலன் உயிரிழந்தார். பாலனுக்கு இரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய் இருந்தது குறிப்பிடத்தக்கது.