அதிகரிக்கும் ஒமைக்ரான் தொற்று - டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள்
ஒமைக்ரான் கொரோனா வகை தொற்று அதிகரித்து வருவதையடுத்து டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஒமைக்ரான் கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் மேலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்குகளை உடனடியாக மூட டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் டெல்லியில் மெட்ரோ, உணவகங்கள், மதுபான கூடங்கள் 50% இருக்கைகளுடன் மட்டும் செயல்பட அரசு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.
டெல்லியில் ஒமைக்ரான், கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசியல் கூட்டங்கள், மத விழாக்கள், கொண்டாட்டங்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகத்திலுள்ள கடைகளை திறப்பதிலும் டெல்லி அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.