கொரோனாவுக்கான புதிய அறிகுறிகள் என்னென்ன ?

கொரோனாவுக்கான புதிய அறிகுறிகள் என்னென்ன ?

கொரோனாவுக்கான புதிய அறிகுறிகள் என்னென்ன ?
Published on

நுகரும் தன்மையை இழத்தல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவையும் கொரோனா நோய் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

காய்ச்சல் மற்றும் வரட்டு இருமலே கொரோனா நோய்த் தொற்றின் ஆரம்ப கட்ட அறிகுறிகளாக கருதப்பட்டது. இதற்கு காரணம் கொரோனா வைரஸ் சுவாசக் குழாயின் மூலமே மனித உடலில் நுழைகிறது. இதனால் காய்ச்சல், வரட்டு இருமல், சுவாசிப்பதில் சிரமம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்படி மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தற்போது திடீரென நுகரும் தன்மையையோ சுவையை அறியும் ஆற்றலையோ இழப்பதும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம் என இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அதே நேரம் வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகளும் தெரியலாம் என கூறப்படுகிறது. சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைச்சுற்றல் போன்ற பாதிப்புகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

எனினும் இவையெல்லாம் பாதிப்பு ஏற்பட்ட சிறிது நாட்களுக்கு பின்னரே தெரியத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் வெகு சிலரே வயிற்றுப்போக்கை ஒரு அறிகுறியாக தெரிவித்துள்ளாதாகவும், நுகரும் தன்மையையும் சுவையை அறியும் ஆற்றலையும் யாரும் இழந்ததற்கான ஆதாரம் இல்லை என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மருத்துவர்கள் கூறுகின்றனர். எனினும் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற அறிகுறிகள் தெரிந்தால் நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்வதோ பரிசோதனை செய்து கொள்வதோ நல்லது என மருத்துவர்கள் கூறூகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com