"கொரோனா தொற்றியவர்களை மீண்டும் 8 மாதத்திற்கு தாக்காது" - ஆய்வில் தகவல்

"கொரோனா தொற்றியவர்களை மீண்டும் 8 மாதத்திற்கு தாக்காது" - ஆய்வில் தகவல்

"கொரோனா தொற்றியவர்களை மீண்டும் 8 மாதத்திற்கு தாக்காது" - ஆய்வில் தகவல்
Published on

கொரோனாவில் இருந்து குணமானவர்களை குறைந்தது 8 மாதங்களுக்கு அந்த வைரஸ் மீண்டும் தாக்காது என பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

எதிர்ப்பு சக்தி அறிவியல் என்ற சர்வதேச மருத்துவ இதழில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த விரிவான ஆய்வு கட்டுரை வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில இடங்களில் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்த தகவல்கள் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளன. இதில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் உடலில், அந்த வைரஸிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி குறைந்தது 8 மாதங்களுக்கு அவர்கள் உடலில் இருக்கும் என்றும் அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்த 25 பேரை சோதனைக்குட்படுத்தி, தொற்று ஏற்பட்ட 4ஆவது நாளில் இருந்து 242ஆவது நாள் வரை அவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் தொற்று ஏற்பட்ட 20ஆவது நாளில் இருந்தே எதிர்ப்பு சக்தி உருவாகத் தொடங்கி விடுவதாகவும், அது 240 நாட்கள் வரை நீடிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது இந்த எதிர்ப்பு சக்தி அதிக நாட்கள் நீடிக்கும் என்றும் அந்த ஆய்வுக் கட்டுரை தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com