\
தமிழகத்தில் 30 ஆயிரத்தை நெருங்கும் தினசரி கொரோனா தொற்று

தமிழகத்தில் 30 ஆயிரத்தை நெருங்கும் தினசரி கொரோனா தொற்று

தமிழகத்தில் 30 ஆயிரத்தை நெருங்கும் தினசரி கொரோனா தொற்று
Published on: 

தமிழ்நாட்டில் இன்று மேலும் 29,870 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று மேலும் 29,870 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30,72,666 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 1,87,358 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மேலும் 21,684 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 28,48,163 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவுக்கு மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று தமிழகத்தில் 1,54,282 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சென்னையில் மட்டும் இன்று 7,038 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயமுத்தூரில் 3,653 பேரும், செங்கல்பட்டில் 2,250 பேரும் , கன்னியாகுமரியில் 1,248 பேரும், திருவள்ளூரில் 1,016 பேரும் , சேலத்தில் 1009 பேரும் இன்று புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com