\
கொரோனாவிலிருந்து மீண்ட ம.பி முதல்வர் பிளாஸ்மா தானம் வழங்க முடிவு

கொரோனாவிலிருந்து மீண்ட ம.பி முதல்வர் பிளாஸ்மா தானம் வழங்க முடிவு

கொரோனாவிலிருந்து மீண்ட ம.பி முதல்வர் பிளாஸ்மா தானம் வழங்க முடிவு
Published on

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஏதுவாக பிளாஸ்மா தானம் வழங்க முடிவு செய்துள்ளார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்.

கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக தனது இரத்த பிளாஸ்மாவை தானம் செய்ய உள்ளதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்தார். கடந்த ஜூலை 25 ம் தேதி முதல்வர் சவுகான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அதனையடுத்து 11 நாட்களுக்குப் பிறகு ஆகஸ்டு 5 ஆம் தேதி அவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது மத்திய பிரதேசத்தில் 8,800 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com