\
’கொரோனாவால் இறந்து விடுபட்ட மரணங்களின் எண்ணிக்கை 444 பேர்’ - தமிழக சுகாதாரத்துறை

’கொரோனாவால் இறந்து விடுபட்ட மரணங்களின் எண்ணிக்கை 444 பேர்’ - தமிழக சுகாதாரத்துறை

’கொரோனாவால் இறந்து விடுபட்ட மரணங்களின் எண்ணிக்கை 444 பேர்’ - தமிழக சுகாதாரத்துறை
Published on

தமிழகத்தில் கொரோனா வைரஸால் இறந்து விடுபட்ட மரணங்களின் எண்ணிக்கை 444 பேர் என கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், “அரசு ஆஸ்பத்திரியில் எனது குடும்பத்தினர் சிறப்பான சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழக அரசு கொரோனா விவகாரத்தில் வெளிப்படையாக செயல்பட்டு வருகிறது.

கடந்த மார்ச் 1 முதல் ஜூன் 10ஆம் தேதி வரை வேறு காரணங்களால் மரணித்தவர்கள் என்று மருத்துவர்களால் சொல்லப்பட்ட 444 மரணங்கள் கொரோனா நோய்தொற்று மரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த 444 மரணங்கள் இதுவரை கொரோனாவில் உயிரிழந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்படும்” என்றார். அத்துடன் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கண்டு அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதாரத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com